Saturday, January 18, 2014

21 இயற்கை மருத்துவக் குறிப்புகள்

வணக்கம் நண்பர்களே..! மனிதர்கள் சந்திக்கும் நோய்கள் பல. அவற்றை தீர்க்க எத்தனையோ வித மருத்துவ முறைகளை கையாள்கிறோம். சில நோய்கள் விரைவில் குணமடையும். சில நோய்கள் குணமடைய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். ஒரு சில நோய்கள் தீர்க்கப்படாமலேயே இருக்கும். இதைத் தீராத வியாதிகள் என்பர். நமது முன்னோர்கள் வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் எளிதாக கிடைக்கக்கூடிய இயற்கை மூலிகைகளிலிருந்து உடலில் ஏற்படும் நோய்களுக்கு தீர்வு கண்டுள்ளனர். அவற்றில் 21 வகையான மருத்துவமுறைகளை இங்கு பதிந்துள்ளேன். படித்துப் பயன்பெறுங்கள். நன்றி..!

அருகம் புல் சாறின் அருமை:
ஆபத்துக்கு உதவுவது அருகம்புல். திடீர் வண்டுக்கடி, அலர்ஜி(Allergy) என்ற ஒவ்வாமை(), கடித்தது என்னவென்று தெரியாத விஷக்கடி(Poisonous bite) போன்றவற்றிற்கு, நச்சு நீக்கியாக அருகம்புல் சாறு உதவும்.

இடுப்பு வலியா?(Pelvic pain?)
வருத்த உளுந்து மாவு நூறு கிராம், நல்லெண்ணெய் 200 கிராம். கருப்பட்டி அல்லது பனை வெல்லம் 200 கிராம். அமுக்கிரா கிழங்கு மாவு 100 கிராம். நல்லெண்ணெயை வாணலியில் இட்டு அடுப்பில் வைத்து எரித்து அதில் மற்ற மேலே கூறிய பொருட்களை இட்டு இளகம் போல் செய்து காலை- மாலை ஒரு கோலி அல்லது ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் குனிய நிமிர முடியாத இடுப்பு வலிகள் குணமாகும்.

உடம்பு எரிச்சல் குணமாக
உடம்பு எரிச்சல் குணமாக தினமும் காலையில் கரும்புச்சாறு 100 மில்லி தயிர் 100 மில்லிகலந்து சாப்பிட உடம்பு எரிச்சல் சரியாகும்.

கண் பார்வை குறைவா?
(To correct vision loss)
கொத்து மல்லிக்கீரையில் பல அரிய சத்துக்கள நிரம்பியுள்ளன. வாசனை மிகுதி. தினமும் கொத்து மல்லியை வாயிலிட்டு மென்று தின்றால் கண்பார்வை தெளிவு பெறும்.

கால்வெடிப்பு குணமாக
கால்வெடிப்பு வராமல் தடுக்க, இரவில் படுக்கச் செல்லும்போது பாதங்களில் இலுப்பை எண்ணெய் அல்லது வேப்பை எண்ணெய் தடவுங்கள். காலையில் பல் துலக்கி நீராகாரம் அல்லது மோர் எலுமிச்சை ஊறுகாயுடன் அருந்துங்கள்.

குடல்புண் குணமாக
(Intestinal ulcer cured)
முட்டைகோஸ் ஐம்பது கிராம் எடுத்து இருநூறு மில்லி தண்ணீரில் வேகவைத்து அந்த நீரை பருகுங்கள். வேறு மருந்து தேவையில்லாமல் குடற்புண் குணமாகும்.

சளியைத் துரத்தும் தூதுவளை:
(making it possible to cure)
தூதுவளை, பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதன் இலைகள் சளியால் ஏற்படும் தொண்டை வலிக்கு மிகச் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதிக உஷ்ணத் தன்மை கொண்டது. எனவே, கபத்தை உடைக்கும் தன்மை கொண்டது. இதைத் தொடர்ந்து உட்கொண்டால், நல்ல உடல் வனப்பும், கட்டான உடலமைப்பும் பெறுவர். இக்கீரை, மூலநோய்க்கு(Hemorrhoids) நல்ல மருந்தாகும். அதிக உஷ்ணம் கொண்டதால் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடலாம். இதை தண்ணீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி, அந்த தண்ணீரை பருகி வந்தால், இருமல் குணமாகும்.

சொரி சிறங்கு குணமாக
(to cure itch)
கற்பூரம், சந்தனம், மிளகு சமஅளவு எடுத்து அரைத்து உடம்புக்கு தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால் சொரி சிரங்கு குணமாகும்.
வசம்பு 50 கிராம் எடத்து 200 மில்லி தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடம் பில் பூசி வர சொரி சிறங்குகள் அகலும்.

சோற்று கற்றாழையின் மருத்துவ குணங்கள்
(Medicinal properties of aloes)
இதன் ஜெல் சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது. முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி, முகப்பருக்களை போக்க உதவுகிறது. சிறிதளவு கற்றாழை ஜெல்லுடன் 10 சொட்டு பாதாம் எண்ணெய் விட்டு முகத்தில் தடவி வர, வறண்ட சருமம் சரியாகும். கிளிசரின் ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழ எண்ணெய் இரண்டு சொட்டு ஆகியவற்றுடன், கற்றாழை ஜெல்லை (Aloe vera gel)கலந்து முகத்தில் போட்டால், சருமம் மிருதுவாகும்.
குறிப்பு: கடையில் ரெடிமேடாக கிடைக்கும் கற்றாழை ஜெல்களை வாங்கி பயன்படுத்துவதை விட, வீட்டில் செடி வளர்த்து, அந்த இலைகளிலிருந்து நாமே பிரஷ்ஷாக ஜெல் எடுத்து பயன்படுத்தினால், கூடுதல் பலன் பெறலாம்.

பல் சொத்தை ஆவதை தவிர்க்க
சிறுவர்கள் சர்க்கரைப் பொருட்கள், இனிப்புப் பொருட்கள், சாக்லெட், மிட்டாய், ஐஸ் கிரிம், கிரஷ, குளிர்ந்த பானங்கள் சாப்பிடும்போது சர்க்கரை பல்லில் ஒட்டி எனாமல்போய் கிருமிகள் உண்டாகி சொத்தை ஆகின்றன. இவற்றை தவிர்ப் பது நல்லது.
health tips for all
புண்கள் ஆற வேண்டுமா?
(To treat ulcers)
வெள்ளை வெங்காயத்தை அடிக்கடி உணவில் பயன்படுத்துங்கள். வயிற்றிலும் குடலிலும் உண்டாகும் புண்களை ஆற்றிவிடும்.
இளம் ஆண்- பெண்களுக்கு ஏற்படும் முகப்பருக்கள் போக, காய்ச்சி ஆறிய ஒரு கோப்பை நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து சீனிச்சர்க்கரை கலந்து சாப்பிட குணம் கிடைக்கும்.

மசக்கை வாந்தியா?
(to control vomiting)
பெண்கள் மசக்கை வாந்திக்கு காய்ச்சிய பசும்பாலில் ஆறிய பிறகு நாட்டுக் கோழி முட்டையின் வெண்கரு(Nucleus of the egg white), கால் பாட்டில் சோடா நீர்(Soda Water) கலந்து சாப்பிட கர்ப்பணிக்கு ஏற்பட்ட மசக்கை வாந்தி உடனே நிற்கும்.

மூளைப் பலப்பட தாமரைப்பூ இளகம்
(The treatment of brain power)
  • உலர்ந்த வெண்தாமரை- செந்தாமரை சூரணங்கள் 70 கிராம், 
  • காசினி சூரணம் 50 கிராம், 
  • திராட்சை விதையுள்ளது (உலர்ந்தது) 70 கிராம், 
  • சீந்தில் கொடி சூரணம் 70 கிராம், 
  • நெல்லி வற்றல் சூர ணம் 70 கிராம், 
  • திப்பிலி சூரணம் 50 கிராம், 
  • பசும்பால் 3 லிட்டர், 
  • சர்க்கரை 500 கிராம் அல்லது பனைவெல்லம் நெய் 200 கிராம். 
இவற்றை சேர்த்து சூரணமாக்கி சாப்பிட்டால் அறிவு விசாலமாகும்(Widen knowledge). இதயம், மூளை பலப்படும்.

நீர் கடுப்பு உடல் எரிச்சல் தீர
வெள்ளரிக்காய், தக்காளிப்பழம், வெங்காயம், பச்சைப் பருப்பு சேர்த்து கூட்டு சாப்பிடுங்கள். குணமாகும்.

Healh tips
Healh tips

தேள் கடித்து விட்டதா?
(cure scorpion bites)
தேங்காய் அரை மூடியை திருகி பால் எடுத்து கொஞ்சம்கொஞ்சமாக குடியுங்கள். கடுப்பு குணமாகும். வெங்காயத்தை கொட்டிய பாகத்தின் மேல் தேய்த்துக் கொண்டிருக்க வலி கொட்டிய இடத்துக்கு வந்துவிடும். 

தோல் வியாதி குணமாக்கும் திருநீற்றுபச்சை:
(to cure skin problem)
படை மற்றும் தோல் வியாதிகளுக்கு பயன்படுகிறது. முகப்பரு, வேனல் கட்டி போன்றவற்றிற்கு இந்த இலையின் சாற்றை போட்டால் குணமாகும். இதன் சாறை தேள் கடித்த இடத்தில் தடவ, கடுப்பு நீங்கும்.

பருத்த உடலை இளைக்கச் செய்ய - (நீங்கள் ஒல்லியாக வேண்டுமா?)
ஐம்பது கிராம் கொள்ளு எடுத்து அரைலிட்டர் தண்ணீரில் இரவில் ஊறவைத்து காலையில் கொதிக்க வைத்து, சிறிது இந்துப்பு சேர்த்து சாப்பிடவும். அதேபோல் காலையில் ஊறவைத்து இரவில் சாப்பிட வேண்டும். இப்படியாக 48 நாட்கள் சாப்பிட்டால் சரிரம் இளைத்து விடும்.

ஜீரண சக்தி கோளாறா?
(Digestive problem?)
நன்றாக ஜீரணமாகவேண்டுமா? சுவையான காய்கறி பண்டங்களில் கரு வேப்பிலைசேர்த்துக் கொள்ளுங்கள். வாசனையோடு பண்டங்களுக்கு சுவையூட்டி நல்ல ஜீரணமும் கொடுக்கும் இந்த கருவேப்பிலை(Curry leaves). பருப்பு அல்லது தேங்காய் புளி மிளகாய் சேர்த்து துவையல் செய்து சாப்பிடுங்கள்.
health tips for all

வாய்ப்புண் குணமாக
(To treat thrush)
வாயில் புண் அடிக்கடி வருகிறதா? அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை மாற்றி மாற்றி வெங்காயம் சேர்த்து சாப்பிடுங்கள். தேங்காய் துருவி பால் சாப்பிடுங்கள். மரு தோன்றி இலையை நீரில் இரவில் ஊறவைத்து காலையில் வாய் கொப்பளிக்க புண்கள் ஆறிவிடும்.

வேம்புவின் மருத்துவ குணங்கள்:
(Medicinal neem)
மருத்துவ குணம் கொண் டது. சின்னம்மை தாக்கிய பின், முதலில் குளிக்கும் போது இதன் இலையை போட்டு குளிப்பது வழக்கம். வேப்பிலைகளை பெட்டிகள் மற்றும் பீரோவில் போட்டு வைப்பதால், கரப்பான் பூச்சிகள் அண்டாது.

வேதனைகளைப் போக்கும் வில்வம்:
(Therapeutic Bilva)
வில்வ மரத்தின் இலை, பூ, காய், வேர் ஆகிய எல்லாமே மருந்தாக பயன்படும். வில்வ இலை மூன்று இலை சேர்ந்த மாதிரி அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பு. வில்வ இலை மாலை கண் நோய்(Eye disease in the evening) மற்றும் தோல் வியாதிகளுக்கு(Skin Diseases) சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

வில்வ பழம் (Bow saw fruit)பித்தத்தை போக்கும். இப்பழத்துடன் சர்க்கரை சேர்த்து, காலையில், 21 நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் அடியோடு ஒழியும். வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வாய்ப்புண், வாய் வெந்திருத்தல் போன்றவற்றிற்கு வில்வப் பழத்துடன்(Arcuate fruit) சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மூன்றே நாளில் நலமாகும்.

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? - ஓர் எச்சரிக்கை குறிப்பு.!

சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா?

ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது ஒரு சரியான செயல் அல்ல.

சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம் , 

madulai
மாதுளை

வெறும் வயிற்றில் பழம் சாப்பிடும்போது நமது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளிகொண்டு வருகிறது இந்த பழம். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்க வழி வகை செய்கிறது.
banana
வாழைப் பழம்


சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது முதலில் எளிதாக ஜீரணமாவது இந்தப் பழம்தான். இதனால் உணவுகள் முழுவதும் செரிக்காத நிலையில் அமிலமாகவும், செரித்த பழம் வயிற்றிலுள்ள ஜீரணமாக பயன்படும் அமிலங்களுடன் கலந்து வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். இதனால் வயிற்றுள்ள உணவு கெட்டுப்போகும். எனவேதான் சாப்பாட்டிற்கு பின்பு பழம் சாப்பிடாமல் முன்பு சாப்பிடும்போது அதனுடைய பலன் அதிகம் நம்மை சேருகிறது. 


grapes
திராட்சை பழங்கள்


அதேபோல பழத்தை அப்படியே சாப்பிடுவதால் முழுமையான நார்ச்சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். ஜீஸ்(Juice) செய்தோ, வேறுவகைகளிலோ சாப்பிடும்போது முழுவதுமாக பழத்திலுள்ள நார்ச்சத்தானது நமக்கு கிடைக்காமல் போகும். 


guava
கொய்யாப் பழங்கள்



சிறு துரும்பும் பல் குத்த உதவுவதுபோல இந்த சின்ன விஷயங்களிலும் நாம் கவனம் எடுக்கும்போது நமது உடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. நீண்ட ஆயுட்காலத்தையும் நாமே நிர்ணயிக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.

Orange Fruit
ஆரஞ்சு


பழங்கள் நமது உடல்நலத்தில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. நோய்வாய்ப் படும் காலங்களில் பழமே மிகவும் பிரதான உணவாக இருக்கிறது. மருத்துவர்கள் இக்காலங்களில் பரிந்துரை செய்வது பழங்கள் தான்.

ஆரோக்கியம் தரும் சில அற்புத பழங்களின் படங்கள்:

amla
நெல்லிக் கனிகள்

star fruit
நட்சத்திர பழங்கள்

naval palam
நாவல் பழங்கள்

tomatoes
தக்காளிப் பழங்கள்


apple fruits
ஆப்பிள் பழங்கள்

`


papaya fruit
பப்பாளிப் பழம்


Holy Spirit Fruit
லீச்சிப் பழங்கள்
குறிப்பு: பதிவில் குறிப்பிட்டுள்ள பழம் வாழைப்பழம். நாம் அன்றாட விருந்துகளில் பயன்படுத்தும் பழமாகையால், குறிப்பாக விருந்தில் வாழைப்பழம் வைக்கும் வழக்கம் நம்மிடம் உள்ளதாலும் சாப்பிட்ட பிறகே பலரும் பழத்தை சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்கிறோம். இதைத் தவிர்க்கவே இப்பதிவு.. பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளலாம். நன்றி.!

உயிர் காக்கும் தயிர்...!

உயிர்காக்கும் தயிரா? அது எப்படி? என்று அறிய ஆவலாக வந்துள்ள அன்பு நண்பர்களுக்கு வணக்கம். 

சிறுவயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவில் சேர்த்துக்கொள்ளும் ஒரு சிறந்த உணவுப்பொருள் தயிர் என்றால் அது
மிகையாகாது.

தயிரில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கொடுக்கக்கூடிய மருந்துப்பொருட்கள் உள்ளது. வெறும் ருசிக்காகவே உண்பது இதுவல்ல. இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. அது என்னென்ன? வாங்க பார்த்துடலாம்.


உயிர்காக்கும் தயிர் என்று குறிப்பிட்டிருக்கிறேனே அது எப்படி என்கிறீர்களா?

நோயில்லா உடலே அதிக வாழ்நாளைக் கொடுக்கும். உடலில் நோய்கள் பல வரக்காரணமே உடற்சூடுதான். அதனால் உடலில் பல்வேறு இராசயன மாற்றங்கள் ஏற்பட்டு, வெப்பத்தால் ஒவ்வொரு உடல் உறுப்பும் தனது பணியை சரிவர செய்யாமல், இயங்காமல் இருந்துவிடும். இதனால் விளைவது நோய்கள். 

உடற் சூட்டை தணிப்பதில் தயிர் மாபெரும் பங்கு வகிக்கிறது. தலையில் தயிரைத் தேய்துக்கொள்வதன் மூலம் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, நல்ல ஆரோக்கியமான, பளபளக்கும் தலைமுடியைப் பெறலாம். உடற் சூடும் தணியும். 

உடல் சூடு தனிவதால் , உடலில் உள்ள உள்ளுறுப்புகள் சரிவர வேலை செய்யத்துவங்கும். உடலும் சீரான நிலைக்கு வந்துவிடும். இப்போது சொல்லுங்கள் தயிர் ஒரு உயிர்காக்கும் உணவுப்பொருள்தானே..

மேலும் தயிரில் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?

1. பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால் பாலைவிட தயிரே சிறந்த உணவுப்பொருள். இது பாலைவிட அதிவிரைவாக ஜீரணமாகிவிடுகிறது. தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் குடலில் உள்ள தீமை தரும் பாக்டீரியாவை அழிக்கிறது. 
2.உடலில் விரைவாக ஜீரணசக்தியை தூண்டும் பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. இதனால் உணவு எளிதில் ஜிரணமாகிவிடும். மருத்துவர்கள் கூட தயிரை சிபாரிசு செய்வார்கள். நோய்வாய்ப்பட்டவர்கள் முதலில் ஆகாரமாக தயிர் சாதத்தை எடுத்துக்கொள்வார்கள். தயிரிலுள்ள Lactobasil ஜீரண சக்தியைத் தூண்டுகிறது. 
3. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல் போன்ற உபாதைகளை சரி செய்வதில் தயிரின் பங்கு அதிகம். இதுபோன்ற சூழ்நிலைகளில் தயிரை அப்படியே சாப்பிடலாம். இதன் சிறிது வெந்தயத்தையும் கலந்து சாப்பிட வயிற்றுப்பொருமல், வயிறு உப்புசம் நீங்கும். 
4. தயிரைக் கடைந்து மோராக்கி அதனுடன் சிறிது உப்பு, கொத்தமல்லி, பெருங்காயம், கருவேப்பிலை கலந்து நீர்மோராக பருகலாம். இதனால் உடல் சூடு தனிந்து உடலுக்கு நல்ல புத்துணர்ச்சிக் கிடைக்கும். 
5. சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக கொழுப்புள்ள பாலில் உருவாக்கிய தயிரை சாப்பிட்டு வர நோய் குணமாகும். 
6. தயிரைக் கொண்டு தோலில் மசாஜ் செய்துவர தோலிலுள்ள நுண்துளைகளில் அழுக்குகள் நீங்கும். தோலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும். 
7. தயிரிலுள்ள பாக்டீரியாக்கள் விட்டமின் B கிரகிப்பதற்கு உதவுகின்றன. 
8. தயிரில் அதிகளவு கால்சியம், புரதம் போன்ற ஊட்டத்துச்சத்துகள் உள்ளது.
9. தேன்,பப்பாளியுடன் தயிரைச் சேர்த்து முகத்தில் தேய்து வர முகம் பொலிவு பெறும். 
10. மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக தயிர் அல்லது மோருடன் தேன்கலந்து கொடுப்பார்கள்.
11. மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க தயிர் பயன்படுகிறது. வயிற்றுப்போக்கின் போது தயிர் கொடுத்தால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும். 
11. வெயிலின் தாக்கத்தினால் தோல்களில் ஏற்படும் பாதிப்புகளை தயிர் சரி செய்கிறது. தோல் தடிப்பு வியாதிகளுக்கு தயிர் அல்லது மோர்க்கட்டு சிறந்ததொரு மருந்தாகும். 

தயிரின் முக்கியப் பயன்: 

ஒரு மனிதன் நன்றாக தூங்கி எழுந்தாலே போதும். அவனுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் உட்பட பலரும் சொல்லும் கருத்து இது. இத்தகைய நிம்மதியான தூக்கத்தைப் பெற தயிரை உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.. நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்.! நன்றி நண்பர்களே..!

English summary: (rough translate)

Yoghurt life saving food. Yoghurt reduces body heat. Yoghurt is a medical nature. Yoghurt controls diarrhea. Yogurt for a good sleep. Yoghurt essential for human food.


இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். 

கணினியின் தாக்கத்திலிருந்து கண்களை காப்பாற்ற......

வணக்கம் நண்பர்களே..!

கணினியால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்: 

நாள்தோறும் கணியைப் பயன்படுத்தி பணிபுரிபவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் கண்களிலும் வலி, உறுத்தல், எரிச்சல், உலர்வுத் தன்மை ஏற்படும்.

  1. பொதுவாக கணினியில் தொடர்ச்சியாக 4 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிபவர்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் (Computer Vision Syndrome)எனப்படும் கண்சார்ந்த பாதிப்பு ஏற்படும். 
  2. கைகளில் விரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள், தோள்பட்டை என மூட்டு இணைப்புகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டு, வலி அதிகரிக்கும். 
  3. தொடர்ச்சியாக கணினித் திரையை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதாலும், வேலையில் தொடர்ச்சியான ஈடுபாடு காட்டுவதாலும் கண்கள் உலர்ந்து, இமைகள் சிமிட்டுவதைக் கூட மறந்து விடுகிறது. 
  4. இயல்பான சிமிட்டல்களின் அளவு குறைந்துவிடுகிறது. 
  5. கண்களில்  ஒரு வறட்சித் தன்மை ஏற்படும். 
இதன் விளைவாக
  • தெளிவற்ற பார்வை
  • கண்களைத் திறந்து வைத்திருக்கும்பொழுதே கண் முன்னே மின்மினிப் பூச்சிகள் பறப்பது போன்ற தோற்றம்
  • திடீரென கண்ணின் முன்னே வெளிச்சப் புள்ளிகள் தோன்றி மறைதல்
  • கண்களில் நீர்வழிதல்
  • எழுத்துக்கள் மங்கலாக தெரிதல்
  • இரண்டிரண்டாக உருவங்கள் தெரிதல்
  • கண்ணிற்கு முன்பு பனிப்படலம் மூடியதைப் போன்ற ஒரு தோற்றம்
இவை அனைத்துமே ஏற்படும்.

இந்த பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி? 

கணினி இருக்கை: 

முதலில் கணினியில் பணிபுரியதக்க இருக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த இருக்கையானது ஏற்றி, இறக்கும் வகையிலும் நன்கு சுழலும் தன்மையுடன் இருக்க வேண்டும்.
கணினியில் உள்ள விசைப்பலகைக்கு இணையாக நீங்கள் அமரும் இருக்கையில் கைப்பிடி உங்கள்  கைகளைத் தாங்க வேண்டும். அதாவது கணினியில் உள்ள விசைப் பலகையில் விரல்களை வைத்து தட்டச்சிடும்பொழுது உங்கள் முழங்கையானது கீழே இறங்காமல்  நீங்கள் அமர்ந்திருக்கும் இருக்கையின் கைப்பிடியில் இருக்குமாறு உங்கள் இருக்கையின் உயரத்தை வைத்திருக்க வேண்டும்.

போதுமான வெளிச்சம்: 

  1. நீங்கள் பயன்டுத்தும் கணினி திரைக்கும், கணினியிலுள்ள விசைப்பலகைக்கும் போதுமான அளவில் வெளிச்சத்தை ஏற்படுத்தி, உங்கள் பணியை நீங்கள் தொடரலாம். 
  2. உங்களுக்கு எதிர்புறமிருந்து ஜன்னல் வழியாகவோ அல்லது வேறு வழியாகவோ வெளிச்சம் ஏற்பட்டு அது உங்கள் கண்களில் பட்டு எதிரொளிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எதிர்புறம் இருந்து வரும் வெளிச்சமானது கண்டிப்பாக உங்கள் கண்களை அதிக பாதிப்புக்கு உள்ளாக்கும். 
  3. கணினித் திரைக்கும் உங்களுக்கும் தோராயமாக 33 சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது உங்களை கைகளை நீட்டினால் கணினித் திரையை உங்கள் விரல் நுனி தொடும் தூரத்தில் கணினித் திரை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். 

வருமுன் காப்போம்: 

கணினியில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும்பொழுது, கண்டிப்பாக கண்களுக்கு ஓய்வளிப்பது முக்கியம். அதாவது இருபதுக்கு இருபது பார்முலாவை பயன்படுத்த வேண்டும்.

அதென்ன இருபதுக்கு இருபது பார்முலா என்கிறீர்களா?

இருபதுக்கு இருபது: 20-20-20

கணினித் திரையையே தொடர்ந்து உற்றுப்பார்த்து வேலை செய்யாமல் இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வை வேறுபக்கம் திருப்பி, இருபது அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை அல்லது பொருள்களை தொடர்ச்சியாக இருபது நொடிகள் பார்ப்பதைத்தான் இருபதுக்கு இருபது பார்முலா என்பார்கள்.

கணினித் திரையிலேயே பார்வையை தொடர்ந்து மணிக்கணக்கில் பதிக்காமல், அதிலேயே தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் இருக்காமல் பார்வையை வேறு திசையில் திருப்பி குறிப்பிட்ட தூரத்தில் உள்ள பொருள்களை, குறிப்பிட்ட நொடிகள் பார்க்க வேண்டும்.

இருபதுக்கு இருபது பார்முலாவை பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள்: 

பார்வை கணினித் திரையைவிட்டு வேறு திசையில் செலுத்தும்பொழுது கண்ணில் உளை தசைகள் இயக்கப்பட்டு, விழித்திரை லென்சின் குவிய தூரம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் மாறுபட்ட கண்ணிற்கு இயக்கம் கிடைக்கிறது. ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதால் கண்கள் இயல்புநிலை, இயல்பான இயக்க நிலையைப் பெறுகிறது.

வருடத்திற்கு ஒருமுறையாவது கண்களில் உள்ள பிரச்னைகளை, தகுதியான கண் மருத்துவரை அணுகி கண்சோதனை செய்துகொண்டு, ஆலோசனைப் பெறுவது உங்கள் கண்களைப் பாதுக்காக்க ஒரு அற்புதமான முன்னேற்பாடான பாதுகாப்பு வழிமுறையை ஏற்படுத்திக்கொடுக்கும்.

நன்றி நண்பர்களே...!

உடல் பருமன் குறைய - Reduce obesity

உடல் பருமன் குறைய எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது. இயற்கையான முறையில் உடல் பருமனைக் குறைப்பதற்கு என்ன வழி என்று பார்ப்போம். 
karisalangkanni keerai
கரிசலாங்கண்ணி கீரை
கரிசலாங்கண்ணி கீரை:


கரிசலாங்கண்ணி கீரையை பருப்பு சேர்த்து,சாதாரண கீரையைப் போல உணவில் பயன்படுத்திவந்தால் உங்கள் உடல் பருமன் விரைவில் குறையும். இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது. கீரைகள் இரவு உணவாக எப்போதும் எடுத்துக்கொள்ளங்கூடாது. 

சில உபயோகமான குறிப்புகள்: 
(Some useful tips:)

இரத்தசோகை நீங்க: 
(To treat anemia)
இரும்புச் சத்துக் குறைவால் சாதாரணமாக இரத்தசோகை ஏற்படும். இவற்றை இயற்கையான முறையில் தடுக்க காய்ச்சிய பசும்பாலின் தேன்(Honey) கலந்து காலையிலும், மாலையிலும் அருந்திவர இரத்த சோகை(Chlorosis) வெகு விரைவில் குணமாகும்: 

தொண்டையில் சதை ஏற்படாமல் இருக்க: 


thumbai poo
தும்பை பூ
தும்பைப் பூவை கொஞ்சம் வாயில் போட்டு மென்று தின்றுவர தொண்டைப் புண்(Sore throat,), தொண்டையில் சதை வளர்ச்சி (muscle growth Control  in the throat) ஆகியவற்றை குணமாக்கும். இந்த தும்பைப் பூவுக்கு மற்றொரு மருத்துவ குணமும் இருக்கிறது. பெண்களுக்கு மாத விலக்கு பிரச்னை (The problem of menstrual) சீர்பட இது உதவும். தும்பைப் பூவோடு, தும்பை இலை, உத்தாமணி இலை ஆகியவற்றை சம பங்கெடுத்து நன்றாக மை போல அரைத்து ஒரு சுண்டைக் காய் அளவு எடுத்து காலை, மாலை இருவேளைகள் மாத்திரையைப் போல விழுங்கி வர மாத விலக்குப் பிரச்னைகள் குணமாகும்.

சேற்றுப் புண் நீங்க: 
(cure Muddy ulcer)
மழைக்காலங்களில் இது பெரும்பாலானோர்க்கு கால்களில் வரும். மேலும் விவசாயிகள் வயல்வெளியில் வேலைகளில் ஈடுபடுவோருக்கும் சேற்றுப்புண் வரும். சேற்றுப் புண் septic ஆகிவிட்டால் வலி அதிகரிக்கும். இவற்றை குணப்படுத்த தேனுடன் மஞ்சள் கலந்து பூச விரலிடுகளில் பூசினால் சேற்றுப்பண்ணிலிருந்து விடுதலைப் பெற்றுவிடலாம். மருந்திடுவதற்கு (before apply the paste) முன்பு சேற்றுப்புண் உள்ள காலை நன்றாக வெண்ணீரில் கழுவி துடைத்தப் பிறகே மஞ்சள், தேன் கலந்த கலவையை(Turmeric, honey Mixture) சேற்றுப்புண் உள்ள இடங்களில் பூச வேண்டும். இந்தக் கவலை விரைவில் சேற்றுப் புண்ணை குணமாக்கும். 

தோல்வியாதி தீர: 

தோல் நோய்கள் வந்து சிலருக்கு தோல்கள் தடித்துக் (Callus) காணப்படும். இதை சீராக்க கொத்தமல்லி இலையை நன்றாக அரைத்து (Coriander leaf paste) தடித்த தோல்பகுதியில் பூசி வர மூன்று நாட்களில் தோல் மிருதுவாகும். தோலும் அழகாக மாறும் (get soft skin ). செய்து பாருங்கள்.. நிச்சயம் பலன் தெரியும். 

கேஸ் ட்ரபுள் நீங்க: 

(Cure Gas Trouble)
கேஸ் ட்ரபிள் பிரச்சனை நிறையப் பேருக்கு இருக்கும். தற்கால உணவுவகைகளால் அதிகமானவர்கள் வாய்வுத் தொல்லைக்கு ஆளாகிறார்கள்.   வாய்வுத் தொல்லையை நீக்க பெருங்காயம் பெரும் பங்காற்றுகிறது. பெருங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துவர வாய்வுத்தொல்லை நீங்கும். பெருங்காயம் வாய்வை களைத்துவிடும். (Asafoetida removes the Gas Trouble. வாய்வுத்தொல்லையின்றி வாழ கட்டாயம் பெருங்காயம் உணவில் சேர்த்தக்கொள்ள வேண்டும். 

கணினி உபயோகிப்பவர்களுக்குப் பயன்படும் "உங்கள் கணினி இயங்கவில்லையா? எளிய தீர்வு!" என்ற பதிவைப் படித்துவிட்டீர்களா?

இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். 

பொடுகை நீக்க..

பொடுகைப் போக்க வேப்பம்பூ: 

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு வேப்பம்பூ பயன்படுகிறது.  இது கோடை காலம் ஆகையால் வேப்பம்பூ (Neem flowers) அதிகம் கிடைக்கும். நூறுகிராம் அளவுள்ள வேப்பம்பூவை , இருநூறு கிராம் தேங்காய் எண்ணையுடன் (Coconut Oil) கலந்து நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும். 

காய்ச்சிய எண்ணெய் இளம் சூடாக இருக்கும்பொழுது எடுத்து தலையில் நன்கு தேய்த்து ஊறவைக்கவும். 

podugu thollai neenga

அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள்.

தொடர்ந்து வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு வேப்பம்பூ கலந்த எண்ணையைத் தேய்த்து குளித்துவர, உங்களைப் பாடாய் படுத்திய பொடுகு தொல்லை போயே போய்விடும். 

எளிமையான இந்த இயற்கை வைத்தியத்தைப் பயன்படுத்தி பொடுகு தொல்லையை தவிர்த்திடுங்கள். 

பொடுகை போக்க மற்றொரு முறை: 

மருதாணி இலையை (henna leaves) ஒரு கப் எடுத்துக்கொண்டு, அதனுடன் வெந்தயம் (fenugreek seeds), வேப்பிலை (Neem leaves), துளசி (Tulsi), சீயக்காய்  (Soap nut) ஆகியவற்றைக் கலந்து நன்கு அரைத்துக்கொள்ளவும். 

அரைத்த கலவையுடன் ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி அரை எலுமிச்சை பழச்சாற்றை (Lemon juice) அக்கலவையுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். 

எலுமிச்சைபழச் சாறுக்கு பதில் தயிரையும் (Curd) இதற்குப் பயன்படுத்தலாம். 

நன்கு கலக்கப்பட்ட கலைவை தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தலைக்கு நன்கு அலசி குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாத காலம் செய்துவர  பொடுகு தொல்லை போயே போய்விடும். இக்கலைவையைப் பயன்படுத்துவதால் தலைமுடியும் 'கருகரு'வென நன்கு வளரும். 

This post explained how to remove the Dandruff using in the natural system.  

நன்றி.